திருவருள்

Written by Jiny on .

தமிழ் என்ற மொழியின் பெயர் பிடிக்கும். அந்த மொழியில் பேசுவதென்றால் இன்னும் பிடிக்கும். தமிழில் எழுதுவதென்றால் மிக மிகப் பிடிக்கும். 

தமிழில் உள்ள இலக்கியங்களில் திருமுறைகளெல்லாம் எழுதியிருக்கும் முறை என்னை மிகவும் கவர்ந்த விடயம். ஒரே குரல் ஒலி சார்ந்த எழுத்துக்களில் துவங்கி இறைவனைப் போற்றிப் பாடியிருக்கும் நாயன்மார்களின் திறைமையை யோசித்துப் பார்த்தாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அது நிச்சயம் இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பெருங்கொடை எனத் தான் நான் அதைக் கருதுவேன்.

அதே போல் தான், தமிழராகப் பிறந்து தமிழ் மொழியைப் பேச, வாசிக்க எழுத, புரிந்துகொள்ளத் தெரிந்ததும் இறைவனின் கொடையே. காரணம் தமிழ் மொழி அவ்வளவு அழகு, அதன் இலக்கணமோ அவ்வளவு நுணுக்கமாக இருக்கிறது என்பது தான். அது மட்டும் அல்ல, தமிழ் மொழியில் உள்ள பழைமையான இலக்கணங்களில் பல பல விடயங்கள் உள்ளன. மொழி, கலாச்சாரம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், சமூகவியல், அரசியல் என்று இன்னும் எத்தனையோ விடயங்கள் பற்றி நமது முன்னோர்கள் நமக்கு எழுத்துவடிவில் கொடுத்துள்ளார்கள். இவற்றையெல்லாம் படிக்காமல் நாமெல்லாம் என்ன செய்கிறோமென்று எனக்குத் தெரியவில்லை..

மனமே மறக்காதே!

Written by Jiny on .

 அறிவே நமக்குக் கிடைத்த பெருஞ்செல்வம். அதனை நாம் சரியாகப் பயன்படுத்தல் வேண்டும். அதற்காகத் தான் இந்தக் கவிதை. நான் vaanam.dk என்னும் இணையத்தில் உறுப்பினராக இருந்த போது, 2006'இல் எழுதிய கவிதை. நான் எழுதிய கவிதைகளில் இதுவே எனக்கு மிகவும் பிரியமானதொன்று; இதோ..

Copyright  © 2011-2014 Jiny.DK - All Rights Reserved

UK betting sites, view full information www.gbetting.co.uk bookamkers