நட்பும் காதலும்

Written by Jiny on .

சிலருக்கு நட்பில் மட்டும் நம்பிக்கை இருக்கும். சிலருக்கு காதலில் மட்டும் நம்பிக்கை இருக்கும். வேறு சிலருக்கு இரண்டிலுமே நம்பிக்கை இருக்கும். ஆனால் இதை விட சிலருக்கு இரண்டிலுமே நம்பிக்கை இருக்காது!.. 


சரி இரண்டையும் சேர்த்து ஒரு கவிதை எழுதுவோம் என்று நினைத்தேன்.. அதுவும் கீழேயுள்ள எனது தம்பி அகிந்தன் Aalborg கப்பல் துறையில் நேற்று எடுத்த புகைப்படத்தைப் பார்த்து எழுதினேன்.. கொஞ்சம் நக்கல் சேர்ந்த கவிதை, ஆனால் அதிலும் ஒரு உண்மை உள்ளது. இல்லையா? எனவே, நாம் யாருடன் பழகினாலும் சற்று கவனத்துடன் பழகுவது நல்லதே. அதுவும் பிறரை மதித்துப் பழகவேண்டும்.. ஏனெனில் நாம் இன்னொருவரின் மனதை காயப்படுத்தினால் அந்தப் பாவம் நம்மை விடுவதாக இல்லை. ஏதோ ஒரு விதத்தில் நம்மைப் பாதிக்கும்.. இது நான் சிலர் வாழ்வில் கண்டறிந்த உண்மையே.. 

ஆகவே.. பிறரை மதித்துக்கொள், பிறர் மனதை காயப்படுத்தாதே :)

 

 

கடலை விட ஆழமானது நட்பு aggi
வானை விட உயர்ந்தது காதல்
ஆனாலும்..
கடலில் வரும் பேரலையைப் போல்
உன்னை மூழ்கச் செய்யும் நட்பு
வானில் இருக்கும் சூரியனைப் போல்
உன்னை எரித்து சாம்பலாக்கிவிடும் காதல்

நீ பிறரை மதிக்கா விட்டால்!

 

 

~ பா. அபிராஜினி

 

Copyright  © 2011-2014 Jiny.DK - All Rights Reserved

UK betting sites, view full information www.gbetting.co.uk bookamkers